இலங்கை

இலங்கைக்கு தொடர் ஆதரவு – ரூமேனியா உறுதியளிப்பு..!

Published

on

இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என ரூமேனியா தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பில் ரூமேனியாவின் வெளிவிவகார துணை அமைச்சர் Traian Laurentiu Hristea இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இலங்கைக்கு 34 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக ரூமேனிய வெளிவிவகார துணை அமைச்சர் த்ரைய்ன் லோரன்தியு கிறிஸ்தா( Traian Laurentiu Hristea,) தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று விஜயம் செய்துள்ளது.

இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு

வெளிவிவகார துணை அமைச்சருடன், வெளிவிவகார அமைச்சின் தியானா தாஸி (Diana Tase) மற்றும் ஆலோசகர் போக்தான் அல்தா ( Bogdan Aldea ) ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் அலரிமாளிகையில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த ரூமேனிய வெளிவிவகார துணை அமைச்சர், இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும், ருமேனியாவின் தலைநகரான புக்கரெஸ்டில் சிறிலங்கா தூதரகத்தை திறக்க தீர்மானித்தமைக்கு ரூமேனிய வெளிவிவகார துணை அமைச்சர் Traian Laurentiu Hristea பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த சில வருடங்களில் பெருமளவிலான இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கியமைக்காக ருமேனிய அரசாங்கத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தனது நன்றியை தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version