இலங்கை
ஜனாதிபதி காலக்கெடு விதிப்பு
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குப் பிறகு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இறுதி செய்ய இலங்கை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் நீண்ட கால தாமதமான கட்டமைப்பு சீர்திருத்தங்களை 2024 இல் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பச் செய்வதில் முதன்மை கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 2024 ஆம் ஆண்டளவில், நிலைமையின் மீது இலங்கை அதிகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
இந்த வாரம் லண்டனில் நடைபெற்ற சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் 40 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்று, முன்னாள் கனேடிய பிரதமர், ஸ்டீபன் ஹார்ப்பருடன் அவர் இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
முதலீடுகளை இலக்காகக் கொண்ட முக்கிய கட்டமைப்பு சீர்திருத்தங்களை முடிப்பதில் இலங்கையின் முதன்மை கவனம் உள்ளது என்று ஜனாதிபதி விக்ரமசிங்க இதன்போது வலியுறுத்தினார்.
You must be logged in to post a comment Login