இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் இந்திரபாலா தொல்லியல் அருங்காட்சியகம் திறந்துவைப்பு!

Published

on

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி.கா.இந்திரபாலா
தொல்லியல் அருங்காட்சியகம் இன்று புதன்கிழமை(24) காலை 11 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வு கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றதுடன்
தொடர்ந்து  கலாநிதி இந்திரபாலா  தொல்லியல் கண்காட்சியும் தொல்லியல் அருங்காட்சியக இணையத்தளமும் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப் பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம்,வரலாற்றுத்துறை ஓய்வுநிலை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், வரலாற்றுத்துறை தலைவர் சாந்தினி அருளானந்தம், பேராசிரியர் மௌனகுரு,ஏனைய பீட பீடாதிபதிகள்,விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மத்திய கலாசார நிதியத்தினர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அருங்காட்சியகம்
வரலாற்றுத்துறை முதல் பேராசான் கலாநிதி கா.இந்திரபாலாவால்
அடித்தளமிடப்பட்டது. இந்நிலையில்
அமெரிக்கத் தூதரகத்தினதும், மத்திய கலாசார நிதியத்தினதும் அனுசரணைகளாலும் தூர நோக்குடன் நவீன அருங்காட்சியகமாக பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் உருப்பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version