இலங்கை

கனடா இனப்படுகொலைதினம் அனுஷ்டிக்க வேண்டும்-விமல் வீரவன்ச வலியுறுத்து!

Published

on

கனடா இனப்படுகொலைதினம் அனுஷ்டிக்க வேண்டும்-விமல் வீரவன்ச வலியுறுத்து!

கனடாவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் 1996 ஆம் ஆண்டு  ஜூன் மாதம் 21 ஆம் திகதி இனப் படுகொலை செய்யப்பட்டார்கள்.எனவே  எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதியை ‘கனடா இனப் படுகொலை தினம்’என நாம் பாராளுமன்றம்   ஊடாக   அனுஷ்டிக்க வேண்டும்  என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எம்.பி.  வலியுறுத்தினார்.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதையடுத்து    விசேட கூற்றை முன்வைத்தே விமல் வீரவன்ச எம்.பி.  இதனை வலியுறுத்தினார்.
 விமல் வீரவன்ச எம்.பி. மேலும் கூறுகையில்,  கனடா நாட்டு பிரதமர்,மே 18 இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டு  இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி  நாட்டை அவமதித்துள்ளார்.
இவ்வாறு இலங்கையை அவமதிக்கும்  கனடாவின்  வரலாற்று பக்கத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.1996 ஆம் ஆண்டு  ஜூன் மாதம்  21 ஆம் திகதி  கனடா  நாட்டில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டார்கள்.கனடாவில் தான் உண்மையில் இனப்படுகொலை இடம்பெற்றது.எனவே எதிர்ரும் ஜூன் மாதம் 21 ஆம் திகதி அந்த தினத்தை நாம் ‘கனடா இனப்படுகொலை தினம்”என பாராளுமன்றத்தின் ஊடாக அனுஷ்டிக்க வேண்டும்.
இலங்கையில் இடம் பெறாத இனப் படுகொலையை கனடா அனுஷ்டிக்கும் போது கனடாவில் இடம்பெற்ற இனப் படுகொலையை நாம் அனுஷ்டிக்க வேண்டும் .அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version