இலங்கை

உயிர்த்த ஞாயிறுதின பங்கரவாதத்தாக்குதல் தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் கலந்துரையாடல்!

Published

on

உயிர்த்த ஞாயிறுதினப்பங்கரவாதத்தாக்குதல்கள்:
வெளிப்படைத்தன்மைவாய்ந்த சுயாதீன விசாரணைகளின் அவசியம் குறித்து
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் – பேராயர் மல்கம் ரஞ்சித் கலந்துரையாடல்
உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும் சுயாதீனமானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் மற்றும் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைக்கோரும் இலங்கையின் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்துடனான சந்திப்பு குறித்துப் பெருமிதமடைவதாகத் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி இந்த மிலேச்சத்தனமான தாக்குதலின் முழுமையான பின்னணி குறித்து சுயாதீனமானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் தாம் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version