இலங்கை

நுளம்புகளை அழிக்க புதிய பொறிமுறை!

Published

on

நுளம்புகளை அழிக்க புதிய பொறிமுறை!

அணுக முடியாத இடங்களில், நுளம்புகளை அழிப்பதற்கு ‘மொஸ்கிட்டோ டன்க்’ என்ற இரசாயனத்தைப் பயன்படுத்தும் நடவடிக்கை, இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அணுக முடியாத இடங்களில், நுளம்புகளை அழிப்பதற்காக ட்ரோன் கருவிகளைப் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், ‘மொஸ்கிட்டோ டன்க்’ என்ற இரசாயனத்தைப் பயன்படுத்தும் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 35 ஆயிரத்து 283 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் சுமார் 400 டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர்.நாடாளாவிய ரீதியில் உள்ள 370 பொது சுகாதார சேவைப் பிரிவுகளில், 39 சுகாதார சேவை பிரிவுகள் அதிக அவதானம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்படட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே, டெங்கு நோயை கட்டுப்படுத்த தங்களது சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version