இலங்கை
மாணவனை தாக்கி டிக்டொக்கில் வெளியிட்ட சக மாணவர்கள்!
வவுனியாவில் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலர் இணைந்து சக மாணவனை நேற்றைய தினம் வீதியில் வைத்து தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்குழு ஒன்று வவுனியா வைரவ புளியங்குளம் வீதியில் வைத்து ஒரு மாணவனை தலைக்கவசம், கொட்டன்தடி கொண்டு சரமாரியாக தாக்கி அதனை காணொளியாக பதிவு செய்து ரிக்டொக்கில் சாகசம் காட்டி பதிவு செய்துள்ளனர்.
இதனை தொடரந்து பாதிக்கப்பட்ட மாணவன் பொலிஸில் முறைப்பாடு செய்தனை தொடர்ந்து குறித்த வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய ஓர் மாணவனை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் , இன்றைய தினம் குறித்த சம்பவத்துடன் தாெடர்புடைய இன்னொரு மாணவனையும் கைது செய்து தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
இச் சம்பவத்தின் முக்கிய ஆதரமான காணொளியை ஆதாரமாக கொண்டு இதனுடன் தொடர்புடைய ஏனையவர்களை தேடும் பணியினை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
#srilankaNews
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: டிக் டொக் செயலிக்கு தடை - tamilnaadi.com