இலங்கை
கறுவா செய்கையை ஊக்குவிக்கும் செயலமா்வு!
வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாக அது குறித்த விளக்க செயலமா்வு ஒன்று எதிா்வரும் மே 20 ஆம் திகதி சனிக்கிழமை வட்டுக்கேட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.
காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரையில் நடைபெறும் இந்த செயலமா்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளா் கலாநிதி ஜீ.ஜீ.ஜெயசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வடக்கில் கறுவாச் செய்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் தொடா்பாக விளக்க உரை நிகழ்த்துவாா்.
அதனைவிட கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் பலரும் இந்த செயலமா்வில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிப்பதுடன், பொதுமக்களின் கேள்விள், சந்தேகங்களுக்கு பதிலளிப்பாா்கள்.
வடபகுதியில் கறுவாச் செய்கையை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பதற்கான செய்முறை விளக்கங்களும் இங்கு வழங்கப்படுவதுடன், ஆா்வமுள்ளவா்களுக்கு கறுவா கன்றுகளும் இலவசமாக வழங்கப்படும்.
ஆா்வமுள்ளவா்கள் யாரும் இந்த செயலமா்வில் பங்குகொண்டு பயனடைய முடியும் என இதனை ஏற்பாடு செய்திருக்கும் புவனகுமாா் தெரிவித்தாா்.
இது தொடா்பில் மேலதிக தகவல்கள் தேவைப்படுபவா்கள் நிகழ்ச்சி இணைப்பாளரான ஐங்கரனுடன் 077 062 9013 தொடா்புகொள்ளமுடியும் என ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
#srilanakNews
You must be logged in to post a comment Login