இலங்கை
ஐந்தாவது நாள் ஊர்திப் பவனி கொக்குவிலிருந்து ஆரம்பம்!
இதன் ஒரு அங்கமாக தாயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோரியும் இனப்படுகொலையை இளஞ்சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும் முல்லைத்தீவில் இருந்து முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு படங்கள் தாங்கிய ஊர்திப் பவனியானது கடந்த 12 ம் திகதி தொடங்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதி யுத்த காலப் பகுதியில் கடுமையான ஷெல் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களால் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட கப்பலடிப் பகுதியிலிருந்து தொடங்கிய இந்த ஊர்திப் பவனியானது வவுனியா சென்று மன்னார் சென்று அங்கிருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகரை அடைந்து மாங்குளம் கிளிநொச்சி பூநகரி சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது
இந்நிலையில் ஊர்தியின் ஐந்தாவது நாள் பயணம் இன்று காலை கொக்குவில் பகுதியில் ஆரம்பமானது அதனை தொடர்ந்து மருதனார்மடம் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டது அங்கு அதிகளவான மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்
அதனை தொடந்து குறித்த ஊர்தி 1995 ம் ஆண்டு இலங்கை அரசின் விமான குண்டுவீச்சு தாக்குதல் காரணமாக அதிகளவான உறவுகள் கொல்லப்பட்ட நவாலி சென்பீற்றேஸ் தேவாலயத்தில் அஞ்சலி செலுத்தி தற்போது யாழ்ப்பாணம் நகரை நோக்கி செல்கிறது
You must be logged in to post a comment Login