இலங்கை
குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சோலார் !
நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 25,000 குடும்பங்களுக்கு இலவச சோலார் வழங்கப்படவுள்ளது.
அமைச்சரவையின் அனுமதியின் பிnனர் சூரிய படலங்களை வழங்கும் நடவடிக்கை தொடங்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் 500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தியை தேசிய மின் கட்டமைக்கு சேர்க்க எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 10,000 வீடுகளுக்கு சூரிய படலம் மூலம் மின்சாரம் வழங்கப்படவுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் கீழ் 15,000 வீடுகளுக்கு சூரியப்படலம் மூலம் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர் இதற்காக ஒரு வீட்டுக்கு 25 இலட்சம் ரூபா ஒதுக்கப்படும் எனவும் கூறினார்.
#srilankaNews
You must be logged in to post a comment Login