அரசியல்
ஈழத்தமிழர்கள் சுயத்தோடு வாழ்வதற்கான சூழலை உருவாக்குங்கள் -சிறீதரன் கோரிக்கை!
ஈழத்தமிழர்கள் சுயத்தோடு வாழ்வதற்கான சூழலை உருவாக்குங்கள் – நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி. கோரிக்கை.
வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை அதிகாரக் கரங்களினால் வலிந்து பறித்தெடுத்து, அந்நிலங்களில் பௌத்த விகாரைகள் அமைத்தல், இராணுவ முகாம்களை கட்டமைத்தல், சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குதல், சீனா உள்ளிட்ட நாடுகளின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக அவற்றை வழங்குதல் என்பவற்றின் ஊடாக, தமிழ்மக்களின் குடிப்பரம்பலை அடியோடு அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்தும் முன்னெடுப்பதை சிங்கள இனவாத அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மைக் காலங்களில் இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களத்தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் 37 இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இன, மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து, தன்னால் தயாரிக்கப்பட்ட விவரண அறிக்கை ஒன்றை சபாபீடத்துக்கு சமர்ப்பித்து, அதுதொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே சிறீதரன் எம்.பி இதனைத் தெரிவித்துள்ளார்.
#srilankaNews
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: வடக்கு கிழக்கில் விகாரைகளை ஏன் நிர்மாணிக்கக்கூடாது..! - tamilnaadi.com