இலங்கை
இலங்கையின் வறுமை வீதம் அதிகரிப்பு!
2021 இல் தொடர்ந்து அதிகரித்த குறித்த வீதம், பின்னர் 2021 மற்றும் 2022 க்கும் இடையில் 13.1 இலிருந்து 25 சதவீதமாக அதிகரித்தாக வங்கியின் இரு வருட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் பல அபாயங்கள் காரணமாக அடுத்த சில வருடங்களில் வறுமை 25 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளதார நெருக்கடியானது வறுமைக் குறைப்பு மற்றும் மனித மூலதன மேம்பாடு ஆகியவற்றில் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டும் அதற்கு அப்பாலும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது, இதன்படி நாட்டின் பொருளாதாரம் இந்த ஆண்டு 4.3 சதவீதம் சுருங்குகிறது.
எனவே நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகள், நிதி ஒருங்கிணைப்பு மற்றும் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றத்திலேயே தங்கியுள்ளது.
அதிகரித்து வரும் உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வளர்ச்சி குன்றியதை அதிகரிக்க வழிவகுத்தது என்பதுடன், 2021 ஆம் ஆண்டு 7.4 சதவீதத்திலிருந்து 2022 இல் 9.4 சதவீதமாக அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுவே வலுவான மற்றும் நெகிழ்வான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஒரு வாய்ப்பாகவும் அமையும் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது
2023 மற்றும் 2024க்கான எதிர்மறையான பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் வருவாய் திரட்டும் சீர்திருத்தங்களின் பாதகமான விளைவுகள் வறுமைக் கணிப்புகளை மோசமாக்கலாம் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login