இலங்கை

பொதிகள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள்!

Published

on

பொதிகள் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள்!

கடந்த 2ஆம் திகதி பிரான்ஸில் இருந்து வந்த பயணி ஒருவரின் பயணப் பொதியில் இருந்த ரிவோல்வர் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றை கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் கைப்பற்றியதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு 15 இல் வசிக்கும் இந்த 65 வயதான பயணி ஓமான் எயார்லைன்ஸின் WY-373 இல் பிரான்சின் பாரிஸில் இருந்து கடந்த 02 ஆம் திகதி இரவு 06.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

மற்றொரு பயணி, தான் கொண்டு வந்த ஒரு பையை தவறுதலாக எடுத்துச் சென்றுள்ளார், பின்னர் அந்த பயணி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால், கண்காணிப்பு பாதுகாப்பு கமராக்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, தேவையான திருத்தம் செய்யப்பட்டது.

பின்னர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கானர் மூலம் பொதிகளை ஸ்கான் செய்தபோது அதில் துப்பாக்கி மற்றும் ரிவோல்வர் இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து, கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று அவ்விடத்திற்கு வந்து ஆயுதங்களுடன் பயணியையும் பயணப் பொதிகளையும் கைதுசெய்துள்ளனர்.

காவல்துறையினரிடம் கொண்டு செல்லப்பட்ட இந்த ஆயுதங்களை மேலதிக ஆய்வுக்குட்படுத்திய கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை உத்தியோகத்தர், அவை பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டவை என்பதை அவதானித்து, பயணி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு துப்பாக்கிகள் பழுப்பு மற்றும் நிக்கல் நிறத்தில் உள்ளன மற்றும் ஸ்பெயினில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் (ஷஸ்க ர்மபா) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு ஆயுதங்களும் மேலதிக விசாரணை மற்றும் அறிக்கைக்காக கொழும்பு காவல்துறை களப் படைத் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய காவல் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version