அரசியல்

தையிட்டி அராஜகங்களுக்கு வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன்கனகரத்தினம் காட்டம்!

Published

on

தையிட்டி அராஜகங்களுக்கு வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன்கனகரத்தினம் காட்டம்!

தையிட்டி  போன்ற அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என்று வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார் .
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
இன்றைய தினம் யாழ்பாணத்தின் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருக்ககூடிய  தையிட்டி பகுதியிலே ஒரு பிரமாண்டமான புத்தவிகாரையை இராணுவத்தினுடைய உதவியுடன் கட்டப்பட்டிருக்கின்றது.
அந்த இடமானது ஒரு தனியாருக்கு சொந்தமான நிலம் நீதிமன்ற கட்டளையை மீறி இப்படியான சம்பவங்கள் அரசாங்கத்தினால் திட்டமிட்டு வடக்கு கிழக்கிலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
தொடர்ச்சியாக வெடுக்குநாறிமலை குருந்தூர்மலை கந்நியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் ஆலய பகுதி அதனைவிட கிழக்கு மாகாணத்திலே மாதவனை பகுதி மேய்ச்சல் தரவை இப்படியாக பல்வேறு அத்துமீறல்களை இந்த அரசாங்கம் மற்றும் அரச திணைக்களங்கள் குறிப்பாக தொல்லியல் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சு பௌத்த சாசன அமைச்சு மகாவலி அபிவிருத்தி திணைக்களம் வனவள ஜீவராசிகள் திணைக்களம் இப்படியாக பல திணைக்களங்கள் வடக்கு கிழக்கில் கட்டுமீறி தமிழ் மக்களினுடைய பூர்வீக நிலங்களில் சட்டவிரோதமாக பௌத்த விகிரைகளை அமைப்பதை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
அரச படைகளும் அரசும் இதனை தொடர்ந்து வண்ணமே உள்ளன இந்த லட்சணத்திலே இநந்தநாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கக்கூடிய ரணில் விக்கிரமசிங்க அண்மையிலே வவுனியாவில் தமிழ் கட்சிகளுடன் பேசி இனப்பிரச்சினைகளை தீர்ப்போம் என்ற ஒரு இணக்கப்பாட்டினை எட்டியிருந்தார் அதனைவிட இந்த ஆண்டு முற்பகுதியிலே பாராளுமன்ற சர்வகட்சி கூட்டத்தினையும் கூட்டி பல விடயங்கள் எட்டப்பட்டிருந்தாலும் அவற்றில் எவையுமே முறைப்படுத்த முடியாதநிலையில் மீண்டும் இப்பொழுது மேதினத்தன்று ஒரு அறைகூவலை விடுத்திருக்கிறார்.
தமிழ் கட்சிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் பாராளுமன்றத்திலே அரசாங்கத்தில் அங்கம் வகித்து பிரச்சினைகளை தீர்ப்போம் என்று கூறியிருக்கின்றார்.இந்த சூழ்நிலையிலே நாங்கள் ஜனாதிபதியினை நோக்கி தமிழ் மக்கள் சார்பிலே சொல்லக்கூடியது குறிப்பாக நீங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருக்கின்றீர்கள் தற்போது நடைப்பெற்றுகொண்டிருக்கின்ற பௌத்தமயமாக்கல் சிங்கள குடியேற்றங்கள் என்பவற்றை உடனடியாக உங்களால் தடுத்து நிறுத்த முடியும் உங்களின் கீழே தான் இந்த அனைத்து அமைச்சுக்களும் திணைக்களங்களும் இயங்கி வருகின்றன எனவே இந்த அதிகாரிகளும் இராணுவமும் கடற்படையும் புலனாயவாளர்களும் பொலிசாரும் கட்டுமீறி சட்டத்தை மீறி நீதிமன்ற கட்டளைகளை மீறி மதிக்காமல் பல்வேறு அடாவடித்தனங்களை செய்துவருகின்ற நிலையில் நீங்கள் எந்தவொரு நல்லெண்ணத்தையும் நல்லிணக்கத்தையும் தமிழ்மக்கள் மீது காட்டாது ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வந்த பின்பு எங்கள் மீது இருக்ககடிய கோரிக்கை நியாயமானது நீண்டகாலமாக இருக்கூடிம தமிழ் அரசியல் கைதிகளை நீங்கள் நினைத்தால் பொதுமன்னிப்பு அளித்து நாளையே விடுதலை செய்யலாம் அதனைவிட காணமல் போனோருடைய பிரச்சினைக்கு என்ன தீர்வு என்னநடந்தது என்ற தீர்வை உங்களால் சொல்லமுடியும் நடைபெறுகின்ற அட்டூழியங்களை ஒரு முறைமையின் அடிப்படையில் பாதுகாப்பு நீதியமைச்சர் என்றரீதியில் வெளிப்படுத்தமுடியும எங்களுக்கு எந்த சமிஞ்ஞையும் வெளிப்படுத்தாது வெறுமனே எங்கள் நிலங்களை ஆக்கிரமித்து எங்களை அழித்து கொண்டு எங்கள் கலாசாரத்தை எங்கள் இருப்புக்களை இல்லாமல் செய்து கொண்டு மறுபுறமே இவ்வாறான கோரிக்கைகளை விடுகின்றீர்கள் நீங்கள் சர்வதேச நாணய நிதியத்தை சமாளிப்பதற்கும் உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி கடனைபெற ஐ.நாவை திருப்பதிபடுத்தவும் நீங்களா போடும் நாடகம்தான் இந்த அறைகூவல் எனவே இவற்றை ஏற்றுகொள்ளமுடியாது.நீண்டநெடுங்காலமாக 70வருடமாக இந்த நாட்டிலே புரையோடிபோயிருக்கின்ற இனப்பிரச்சினை அதாவதூ ஏற்கனவே குறிப்பிட்டிருந்தீர்கள் சுதந்திர தினத்திற்கு முன்னர் பிரச்சினையை தீர்பபோம்என்று பின்னர் சர்வகட்சி டிரை வவுனியாவில் அழைத்து கலந்துரையாடினீர் பின்னர் பாராளுமன்றிலே அரசியலே அங்கம் வகியுங்கள் என கேட்கிறீர்கள் இது உலக நாடகம் இன்று இடம்பெற்றுகொண்டிருக்ககூடிய அராஜக செயல்களை பார்க்கின்ற பொழுது ஒருபக்கம் எங்களை அழித்து கொண்டு மறுபக்கம் நல்லிணக்கம் சமிக்ஞை காட்டுவது போல் நாடகம் ஆடுகின்றீர்கள் எனவே இந்த தமிழ் கட்சிகள் எல்லையாக இருந்தாலும் அல்லது நாடாளுமன்றிலே தமிழ் பேசும் எந்த கட்சிகளாக இருந்தாலும் அரசே சேரமுடியாது அரசாங்கம் நல்லெண்ண சமிக்ஞையாத அரசியல் கைதிகளை விடுதலை செய்து தையிட்டி போன்ற அபகரிப்புக்களை உடனடியாக நிறுத்தவேண்டும்.காணாமல் போனோர் பிரச்சினை தீரவுவேண்டும் ஐ.நா தீர்மானத்தினை காட்டி நல்லெண்ணத்திற்கு அழைக்கவேண்டும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் நாட்டினுடைய காட்டாட்சி இதன் மூலம் ஒலிக்கப்படும் பயங்கரவாத எழுத்து சட்டமும் உற்றாக ஒழிக்கப்பட வேண்டும் கிழக்கு மாகாணத்திலேயே தொடர்ந்து கொண்டிருக்கக் கூடிய அம்பாறை மாவட்ட மக்களது அடிப்படை பிரச்சனைகள் அதேபோல திருமணங்களை மட்டக்களப்பு மாவட்ட மக்களினுடைய பிரச்சினைகளும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் குறிப்பாக இந்த பிரதேச செயலகத் தலைமை தேர்தல் பிரச்சனை பிரதானமானதாக காணப்படுகின்றது அம்பாறை மாவட்டத்திலும் தொடர்கின்ற அடக்கம் முறை முதலில் ஒழிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version