இலங்கை
மனித பாவனைக்கு பொருத்தமற்ற ரின் மீன் விற்பனைஅம்பலம்!
2021ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் மனித பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
துறைமுக அதிகார சபையால் தடைசெய்யப்பட்ட டின் மீன்களை விற்குமாறு 2021 ஜூலையில் அரசுக்கு சொந்தமான சதொச விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை துறைமுக அதிகாரசபையினால் தடைசெய்யப்பட்ட டின் மீன்களை லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக விற்பனை செய்ய அமைச்சரவை தீர்மானித்ததாக அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த டின் மீன்களின் விற்பனையை நிறுத்த நுகர்வோர் அதிகார சபை தலையிட்டது.
எனினும்,வர்த்தக அமைச்சகம் குறித்த விற்பனையை தொடர விரும்பியதாகவும் இது அரசு நடத்திய கொலை. சதொசவில் தரமற்ற பொருட்கள் குவிந்து கிடக்கின்றன என தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login