அரசியல்
தொழிலாளர்களுக்குரிய சம்பளங்கள் அதிகாிக்க தம்பிராசா கோாிக்கை!
இம்முறை தொழிலாளர் தினத்தில் இருந்து தொழிலாளர்களுக்குரிய சம்பளங்கள் அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அவ்வாறு இல்லாத பட்சத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைமை தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் கட்சிகள் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுவதன் மூலம் சாதாரண தொழிலாளர்களுக்கும் நாள் கூலிகளுக்குமே பாதிப்பு ஏற்படுகின்றது.
மே தினத்தில் தொழிலாளர்களுக்காக குரல் கொடுப்பதற்காக தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்றார்.
#srilankaNews
You must be logged in to post a comment Login