இலங்கை
கோழி, முட்டை விலை குறைகிறது!
அடுத்த இரண்டு வாரங்களில் கோழி மற்றும் முட்டையின் விலை குறைவினால் நுகர்வோர் பயனடைவார்கள் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கால்நடை உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை அடுத்து, இந்தச் சலுகையை வழங்க முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் குறித்த சங்கம் புதன்கிழமை (26) கலந்துரையாடியது.
“நீண்ட விவாதத்தைத் தொடர்ந்து, தேவையான கோழி தீவனங்களை இறக்குமதி செய்வது மற்றும் கால்நடைகளுக்கு வருடாந்திர நெல் அறுவடையில் அதிகப்படியான நெல்லை வழங்குவது குறித்து உடனடியாக முடிவெடுக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இந்த முடிவு உற்பத்தி செலவைக் குறைக்க உதவும்,” என்று அவர் கூறினார்.
கால்நடை உணவு உற்பத்திக்கான மூலப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்தால் அது ஒரு கோழி மற்றும் முட்டையின் விற்பனை விலையை குறைக்க உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login