இலங்கை
இலங்கை வந்த இந்திய சுற்றுலா பயணி திடீர் மரணம்!
இந்தியாவிலிருந்து இலங்கையை பார்வையிட வந்த சுற்றுலா பயணியொருவர் நுவரெலியாவில் மரணமடைந்துள்ளார். கடந்த 23ம் திகதி 68 வயதுடைய குறித்த நபர் தனது மனைவியுடன் இலங்கைக்கு வந்துள்ளார்.
நேற்றைய தினம் தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து நுவரெலியா பிரதான நகருக்கு இரவு உணவு உண்பதற்காக சென்றுகொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக நுவரெலியா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் வைத்தியசாலைக்கு வரும் முன்பே மரணித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login