இலங்கை

வினாத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

Published

on

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான பணிகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களை அண்மித்து காணப்படும் விடைத்தால் திருத்தும் நிலையங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல், சிங்களம் மற்றும் ஆங்கிள மொழிமூல பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பங்கள் போதிய அளவில் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அந்த பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக உரிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version