இலங்கை
அதிகரித்துள்ள கறவை மாடுகள் திருட்டு!
கம்பஹா மாவட்டத்தில் தினமும் குறைந்தது ஆறு அல்லது ஏழு மாடுகள் திருடப்படுவதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாடுகள் நாளொன்றுக்கு 15-30 லீற்றர் வரை பால் கொடுக்கும் பசுக்கள் எனவும், கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஒவ்வொரு மாதமும் குறைந்தது 35-40 பசுக்கள் திருடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற மாகாணங்களுக்கு இடையிலான விவசாய அதிகாரிகளுடனான கலந்துரையாடலில், மேல் மாகாணத்தில் அதிகரித்துள்ள மாடு திருட்டு தொடர்பான விபரங்களை மாகாண விவசாய திணைக்கள அதிகாரிகள் முன்வைத்தனர்.
இக்கலந்துரையாடலில், சொகுசு வான்களில் வருபவர்கள், இரவு நேரங்களில் மாட்டு கொட்டகையில் கட்டி வைத்துள்ள பால்மாக்களை கடத்திச் செல்வதும் தெரியவந்தது. அத்துடன் தீவின் மற்ற பகுதிகளில் மாடு திருட்டு அதிகரித்து வருவதாக அனைத்து விவசாய அதிகாரிகளும் தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர, இரவு ரோந்து, வாகன சோதனை அதிகரிப்பு மற்றும் பசு திருடர்களுக்கு சிறிலங்கா காவல்துறையினரால் தற்போது வழங்கப்படும் தண்டனை அதிகரிப்பு தொடர்பில் காவல்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு கடிதம் அனுப்புமாறு விவசாய அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
#srilankaNews
You must be logged in to post a comment Login