இலங்கை
வடக்கு மாகாண மாற்றுத் திறனாளிகளினுடைய இசைப் போட்டி
வடக்கு மாகாண மாற்றுத் திறனாளிகளினுடைய இசை திறமையை வெளிக்கொண்டுவரும் முகமாக முதல்முறையாக இசை போட்டி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளது.
இது தொடர்பான ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற போதே ஏற்பாட்டாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
சாவிகா சங்கீத அறிவாலயத்தின் ஏற்பாட்டில் ஏப்ரல் 15ஆம் திகதி சனிக்கிழமை நல்லூர் மங்கையர்க்கரசி மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் குறித்த இசை போட்டிகள் இடம்பெற உள்ளன.
இப்போட்டிகளில் பங்கெடுக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் போட்டி இடம்பெறுகின்ற தினத்தில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையான காலப்பகுதியில் போட்டி இடம்பெறும் மண்டபத்தில் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
போட்டியாளர்கள் தனிப்பாடல், தனிவாத்திய இசைக்கே அனுமதிக்கப்படுவர்.
போட்டியாளர்கள் தமக்கு விருப்பமான ஏதாவது ஒரு பாடலினை (கர்நாடக சங்கீதம்/ திரையிசை/ மேலைத்தேயம்) 6 நிமிடங்களுக்குள் பாடி இசைக்க முடியும்.
வாத்தியம் இசைப்போர் குறித்த குறித்த வாத்தியக்கருவியை கொண்டுவருதல் வேண்டும்.
போட்டி நிறைவுறும் வரை பாதுகாவலர் போட்டியாளருடனிருக்க வேண்டும். இப்போட்டிகளில் அனைத்துவிதமான மாறுறுத்திறனாளிகளும் வயது வேறுபாடின்றி பங்கெடுக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login