இலங்கை

அச்சுவேலி போராட்டம் முடிவு!

Published

on

அரசாங்கத்திற்கு சொந்தமான கிராமிய சிறு கைத்தொழில் திணைக்களத்தின் மாகாண மத்திய அரசிற்கு உரித்தான கட்டடத்தில் மத ஆராதனைகளில் ஈடுபட்டுவந்த போதகர் ஒருவருக்கு எதிராக இன்று அச்சுவேலியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போதகரின் ஆலயத்தில் மாலை வேளை ஆராதனை இடம்பெற்ற போது ஆலயத்திற்கு கல்லால் வீசினர் எனக்கூறி அருகிலுள்ள வங்கி முகாமையாளரைத் தாக்கி கொலை முயற்சியை மேற்கொண்டனர்.

இவ்வாறு தாக்கப்பட்டமையை தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டது. அது குறித்த செய்தி உதயன் பத்திரிகையில் பிரசுரமானது.

இதனையடுத்து உதயன் பத்திரிகை போதகரின் அடாவடித்தனம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது என்பதனை கண்டித்து உதயன் நிறுவனத்திற்கு சென்ற 45 பேருக்கு மேற்பட்ட பணியாளர்களை அச்சுறுத்தியுள்ளது.

குறித்த விடயங்களை கண்டித்து இன்றைய தினம் சிவசேனை அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து போதகரை மதஸ்தலத்திலிருந்து வெளியேறுமாறு தெரிவித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதனையடுத்து இன்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆளுநர் அலுவலகத்தின் செயலாளர் உள்ளிட்டோர் வருகை தந்து நிலமைகளை ஆராய்ந்தனர்.

மேலும் சபை அமைந்துள்ள குறித்த இடத்திற்குச் சென்றும் நிலமைகளைக் கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பாக ஆளுநருக்கு அறிக்கை வழங்கி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்தனர். அதாவது குறித்த அரச கட்டிடத்தினை விடுவிப்பதற்காகநடவடிக்கையிணையும் தாக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதனையும் மேற்கொள்ளுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றனர். பொலீசார் குறித்த விடயம் தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆளுநரின் செயலாளரிடம் சுட்டிக்காட்டினர்.

#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version