இலங்கை

ஊடக சுதந்திர அச்சுறுத்தலுக்கு சைவ மகா சபை கண்டணம்!

Published

on

ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடும் வகையில் ஓர் கிறிஸ்தவ மத குழுவினர் உதயன் பத்திரிகை நிறுவனத்தில் மேற்கொண்ட அடாவடிகளை வன்மையாக சைவ மகா சபை கண்டித்துள்ளது.

இது தொடர்பாக சைவ மகா சபை வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சந்தித்து வரும் மத மாற்றக் குழுக்கள் உண்மையை வெளிப்படுத்தியதற்காக பாதிக்கப்பட்ட மக்களிற்கு நியாயம் கிடைப்பதற்கு வழிகோலும் வகையில் செய்தியை பிரசுரித்தமைக்கு ஊடகத்தை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முயன்ற செயலானது மிலேச்சத்தனமானது

கடந்த காலங்களில் தமிழ் தேசிய பற்றுதிக்காக அது சார்ந்த உண்மைச் செய்திகளை வெளியிட்டமைக்காக பலமுறை தாக்கப்பட்ட மிக துயரமான சம்பவங்களை இந்த ஊடகம் சந்தித்திருந்தது

அந்த யுத்த காலத்தில் ஏற்பட்ட வலியை விட தற்போது மண்ணின் மக்கள் சார்ந்த மனிதநேய செய்திக்காய் புதிதாய் சொந்த மண்ணில் முளைக்கும் குழுக்களால் அச்சுறுத்தப்படுவது மிகுந்த துயரத்தை தருகின்றது.

இவ்வாறான குழுக்கள் சமூக அமைதி மத நல்லிணக்கத்திற்கு மட்டுமன்றி ஊடக சுதந்திரத்திற்குமே பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது இன்று நிதர்சனமாகி உள்ளது.

உடனடியாக குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்பட வலியுறுத்துகின்றோம்.

இவ்வாறான செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க அனைத்து மரபார்ந்த சமய தலைவர்களும் இவ்வாறான மதக்குழுக்களின் செயற்பாட்டை வன்மையாக கண்டித்து சமூக நீதியையும் மதத்தின் பெயரால் நடைபெறும் அநீதியையும் தடுத்து பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்கவும் வேண்டி நிற்கின்றோம் – என்றுள்ளது.

#srilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version