இலங்கை
எரிபொருள் தாங்கிகளுக்கு ஜிபிஎஸ் முறை!!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எரிபொருள் தாங்கிகள் அனைத்துக்கும் எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கும் முறைமை பொருத்தப்படுவதுடன் அதன் பின்னர் தனியார் தாங்கிகளுக்கும் பொருத்தப்படும் என சக்தி மற்றும் மின்சார அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்தார்.
அனைத்து எரிபொருள் நிலையங்களும் குறைந்தபட்சம் 50% எரிபொருளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அடுத்த 8 வாரங்களுக்கான எரிபொருள் சரக்கு திட்டம், சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் பண்டிகை காலங்களில் எரிபொருள் விநியோகம் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று காலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சிய முனைய நிர்வாக அதிகாரிகளுடன் முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதாக அமைச்சர் கூறினார்.
QR கோட்டாவை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இடைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login