இலங்கை

முச்சக்கரவண்டி கட்டணங்களும் குறைப்பு!

Published

on

எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

முதல் மற்றும் இரண்டாவது கிலோமீற்றர்களுக்கு கட்டணத்தைக் குறைக்க அறிவித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க தலைவர் லலித் தர்மசேகர டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.

அதன்படி, இன்றுமுதல் முதலாவது கிலோமீற்றருக்கு ரூ. 100 மற்றும் இரண்டாவது கிலோமீற்றருக்கு ரூ. 80 என கட்டணம் அறவிடப்படும்.

அதேவேளை, தமது வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை 15 லீற்றர்களாக உயர்த்தாதது குறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் மீதான அதிருப்தியையும் சங்கத்தினர் வெளிப்படுத்தினர்.

பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்தும் அமைச்சர் மறுமொழி எதுவும் தரவில்லை எனத் தெரிவித்தனர்.

இதற்கு முன்னதாக முச்சக்கரவண்டி கட்டணமானது முதலாவது கிலோமீற்றருக்கு ரூ. 120 ஆகவும் இரண்டாவது கிலோமீற்றருக்கு ரூ. 100 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version