அரசியல்

கைதிகள் விடுதலைக்காக குரல் கொடுங்கள்!!

Published

on

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 15 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்துவந்த தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமாருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. அவர், கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டாரர்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் நல்லிணக்க நடவடிக்கைகளில் ஒன்றாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது விடுதலைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் பேரில்,   பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டு நான் கைது செய்யப்பட்டேன்.

எனக்கெதிரான வழக்கு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த நீதிமன்றத்தால் எனக்கு ஆயுட்சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தேன். அந்த வழக்கு விசாரணை ஐந்து வருடங்களாக நடைபெற்றதன் பின்னர், எனக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனை மீளுறுதி செய்யப்பட்டது.

அதனை ​எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தேன். சுமார் ஏழு வருடங்களாக அந்த நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது.

இந்நிலையில்தான், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு மற்றும் நல்லிணக்க அடிப்படையில் நான் உட்பட 3 பேருக்கு பெப்ரவரி 1ஆம் திகதியன்று பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது.

அன்றையதினமே ஏனைய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். நான், தாக்கல் செய்திருந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தமையாலும் அதனை நான் வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதாலும் சட்டநடவடிக்கை மற்றும் நிர்வாக நடவடிக்கையால் எனது விடுதலை தாமதமானது.

சிறைச்சாலையில். தண்டனையளிக்கப்பட்ட கைதிகளாக 10 தமிழ் அரசியல் கைதிகளும் விளக்கமறியல் கைதிகளாக 14 கைதிகளும் இருக்கின்றனர். ஆகையால் அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கவேண்டும்.

அத்துடன், “அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஒவ்வொரு மனித உரிமை அமைப்புகளும் கட்சி, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் கைகோர்க்க வேண்டும். அது நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும்.” என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version