அரசியல்

ஜனாதிபதி ஒப்பந்தங்களை மறைத்து வருகிறார்!!

Published

on

தற்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியான பின்னரும் கூட சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை தற்போது மறைத்து வருகின்றார் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தமது பதவிகள் மாறியதும் தீர்மானங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த போது, சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் உடன்படிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அப்போது நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவிடம் கோரினார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மஹர பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சட்டமன்றம், நிறைவேற்று மற்றும் நீதித்துறை ஆகியவை இணைந்து செயல்பட்டாலும், நாட்டில் தற்போது சர்வாதிகார நிறைவேற்று அதிகாரமே ஆட்சிமுறையிலுள்ளதாகவும், அதன் மூலம் உயர்நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் அவமதித்து மிதிக்கும் நிலைக்கு நாட்டு ஆட்சியாளர்கள் வந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

நீதிமன்றத் தீர்ப்புகளைக்கூட சவாலுக்குட்படுத்துவதன் மூலம் அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்ட மக்களின் வாக்குரிமைக்கு கூட சவால் விடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

ஒரு நாடு என்ற வகையில் நாம் ஒரு திருப்புமுனையை எதிர்கொண்டுள்ளோம் என்றாலும், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான யானை காக்கை மொட்டு அரசாங்கம் இதற்கு இடமளிப்பதாக இல்லை என்றார்.

இந்தத் திருப்புமுனையை அரசாங்கம் எதிர்கொண்டால் அவர்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாது போகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்கள் விரோத,மக்கள் எதிர்ப்பு, ஒடுக்குமுறைசார் இந்த அரசாங்கம்,வரி விதித்து,பொருட்களின் விலையை உயர்த்தி மக்களின் கையில் இருக்கும் கடைசி விலங்கைக் கூட பறித்து, பொருளாதாரத்தைச் சுருக்கி வருவதையே செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தை விருத்தி செய்து, மக்களின் கைகளில் பணம் செல்வதற்கான வழிகளை உருவாக்குவதும் தான் நடக்க வேண்டிய செயல்பாடு எனவும் தெரிவித்தார்.

கேள்வியை குறைப்பதற்காக இந்த வரிச் சுழற்சியை அரசாங்கம்  செயல்படுத்தி வருவதாகவும், இதனால் பணவீக்கம் குறைவடைந்து நாடு இயல்பு நிலைக்கு மீளும் என நினைத்தாலும் அது உண்மையில் தவறான செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version