இலங்கை
சீனாவிடமிருந்து பொலிஸ் சீருடை
சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு நன்கொடையாகக் கிடைத்த பொலிஸ் சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக பொலிஸ் திணைக்களத்துக்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (15) முற்பகல் இடம்பெற்றது.
இந்த நன்கொடை தொடர்பான ஆவணங்கள், இலங்கைக்கான சீனத் தூதுவர் சி ஷென் ஹொன்னினால் ஜனாதிபதி முன்னிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் டிரான் அலஸிடம் கையளிக்கப்பட்டது.
பின்னர் ஜனாதிபதியும் நன்கொடைகளை பார்வையிட்டதுடன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
#SriLankaNews
You must be logged in to post a comment Login