இலங்கை

பண மோசடி – 24 பேர் கைது!

Published

on

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி, பலரிடம் பெரும் தொகையில் பண மோசடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமையும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினால் ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களில்  முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விரு மாதங்களிலும் சுமார் 173 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், முறைப்பாட்டாளர்களிடம் இருந்து அறவிடப்பட்டிருந்த பணம் 126 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமென வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக சட்டவிரோத நிறுவனங்கள் மற்றும் முகவர்களிடம் பணம் வழங்குவதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறான நபர்கள் தொடர்பில் 0112 864 241 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை வழங்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version