இலங்கை

இலங்கைக்கு ஆதரவு வழங்கத் தயார் – IMF இடம் சீனா தெரிவிப்பு

Published

on

கடன் பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை மேற்கொள்ள  தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா  தெரிவித்துள்ளது.

“ஆக்கபூர்வமான முறையில்” அதிக கடன்பட்ட நாடுகளுக்கு உதவ பலதரப்பு முயற்சிகளில் பங்கேற்க சீனா தயாராக உள்ளது என்று சீனா மத்திய தொலைக்காட்சி இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சீன பிரதமர் லீ கெகியாங், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

“சம்பந்தப்பட்ட நாடுகளின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சீனா பங்கேற்கத் தயாராக உள்ளது” என்று சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுடன் புதன்கிழமை (01) இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலில் கூறியுள்ளார்.

“அனைத்து தரப்பினரும் கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் சமமான சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சீனா கூறுகிறது.”

இலங்கை மற்றும் பாக்கிஸ்தான் போன்ற கடன் சுமையில் உள்ள நாடுகளுக்கு ஒரு முக்கிய கடன் வழங்கும் நாடான சீனா, இறையாண்மைக் கடனை மறுசீரமைப்பதில் எந்த தரப்பு முன்னிலை வகிக்க வேண்டும் என்பது குறித்து பலதரப்பு வங்கிகளுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

பெய்ஜிங்கில் இருந்து கடன் மறுசீரமைப்பு ஆதரவுக்கான முறையான உத்தரவாதம் இல்லாமல், இலங்கை பிணை எடுப்பிற்கு அனுமதி வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிசீலித்து வருகிறது என்று Bloomberg News கடந்த மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.

திவாலான நாட்டின் இருதரப்பு கடனில் சுமார் 52% பங்கு வகிக்கும் சீன அரசாங்கம், அரசுக்கு சொந்தமான கொள்கை கடன் வழங்கும் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி மூலம் கால நீட்டிப்புகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version