அரசியல்

13ஆவது திருத்தத்தில் எதுவும் இல்லை!

Published

on

நமது நாட்டில் உள்ள இந்திய தமிழ் முகவர்கள் 13ஆவது திருத்தத்துக்கு அழைப்பு விடுக்கின்றனர் என்றும் அது ஓர் எலும்புக்கூடு எனவும் அதில் எதுவும் இல்லை என்றும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் தெரிவித்தது.

“13ஆவது திருத்தத்தை நீக்குமாறு பிக்குகளும் பல சிங்கள அரசியல்வாதிகளும் குரல் கொடுப்பதையும் இது காட்டுகிறது. 13ஆவது திருத்தம் அல்லது சமஷ்டி கோரி நாம் நேரத்தை வீணடிக்கக்கூடாது. இவை இரண்டும் ஒற்றையாட்சியின் ஒரு பகுதியும் மற்றும் 2/3 பெரும்பான்மை சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் ஈகைப்பேரொளி முருகதாஸுக்கான அஞ்சலி நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்களாகிய நாம் தமிழர் மண்ணில் வாழும் ஒவ்வொரு தமிழர்களையும் தமிழர் இறையாண்மைக்காக வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விட வேண்டும். இந்த வாக்கெடுப்பை அமெரிக்காவோ அல்லது ஐ.நாவே கண்காணிக்க வேண்டும்.

உலகில் பெரும்பாலான வாக்கெடுப்புகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் கட்டாயப்படுத்தப்பட்டவை.

இறுதி வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுங்கள். தமிழ் இறையாண்மை கிடைத்தால் நமக்கு வேண்டிய அனைத்தும் கிடைக்கும். நம் வாழ்க்கை நம் கட்டுப்பாட்டில் வரும்.

அண்மையில் சிங்கள சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் “சம்பாறு” போன்ற கோஷங்கள் உறுதியான கோஷம் எதுவும் இல்லை.

தமிழர் இறையாண்மைக்காகவோ அல்லது தமிழர் சுதந்திரத்துக்காகவோ ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் போராட்ட முழக்கம் இருக்க வேண்டும்.

தமிழர்களுக்கு சற்று நிம்மதி தரக்கூடிய வேறு விடயங்களுக்கு அழைப்பு விடுக்காதீர்கள், ஆனால் அது இலங்கை அரசாங்கத்தால் ஒருபோதும் நடக்காது.

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மட்டுமே தமிழர்களுக்கு உதவ முடியும். வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் அனைவரும் பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தால், அது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பலம் வாய்ந்த நாடுகளை நிர்ப்பந்தித்து தமிழர் இறையாண்மைக்கான வாக்கெடுப்பை எளிதாக்கும்” என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version