அரசியல்

அதிக உரைகள் – விரைவில் உலக சாதனை படைக்கும் ஜனாதிபதி

Published

on

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறுகிய காலத்தில் அதிகளவு அக்கிராசன உரைகளை நிகழ்த்தி உலக சாதனை படைக்க போகிறார் எனபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்  இன்று(08) இதனை கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், கடந்த காலங்களில் சுமார் 10 கோடி ரூபா செலவில் நடத்தப்படும் சுதந்திர தின விழாவுக்கு இம்முறை 40 கோடி ரூபாக்கும் மேல் செலவிடப்பட்டுள்ளது.

விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே இம்முறை 40 கோடி ரூபா செலவானதாக அரசாங்கத்தின் அதிகார தரப்பினர் கூறுகின்றனர். இதன் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கை செலவு எந்தளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.

இப்படியான நிலைமையில்  மக்கள் ஆணையில்லாத ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மிக குறுகிய காலத்தில் அதிகளவான அக்கிராசன உரைகளை நிகழ்த்து உலக சாதனை படைக்க போகிறார்.

பாராளுமன்றம் என்பது ஜனாதிபதி அக்கிராசன உரை தொடர்பான கனவுகளை நிறைவேற்று இடமல்ல. பொது பணத்தை செலவிட்டு அவற்றை செய்துக்கொண்டிருக்க இடமளிக்க தேவையில்லை.

இதன் காரணமாக சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையில் செங்கோல் கொண்டு வரப்படும் போது அதற்கு மரியாதை செலுத்தி விட்டு, ஜனாதிபதி உரையாற்ற சென்ற போது, நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பும் செய்தோம்” என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version