இலங்கை

போதைப்பொருள் பாவனை – 5000 மாணவர்களுக்கு சிறை!

Published

on

போதைப்பொருள் பாவனைக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை 5000 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், 2015 ஆம் ஆண்டில், பாடசாலைக்கு செல்லாத கிட்டத்தட்ட 600 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது 2021 இல் 190 ஆகக் குறைந்துள்ளது.

இருப்பினும், சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2015ல் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2,000 ஆக இருந்ததுடன் 2021 ஆம் ஆண்டு ஆகும் போது 5000 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் 2020 ஆம் ஆண்டு 22 பட்டதாரிகள் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version