இந்தியா

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த பீடி இலைகள் மீட்பு!!

Published

on

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள், கடல் அட்டை, கஞ்சா, அபின், செம்மரக்கட்டைகள், திமிங்கலம் வாயில் இருந்து உமிழக்கூடிய அம்பர்கிரீஸ் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இதைத் தடுக்க கடலோர பொலிஸாரும், உள்ளூர் பொலிஸாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ரோந்து நடவடிக்கையின்போது, அங்கு நின்ற ஒரு லாரியை சோதனையிட்டனர். அப்போது அதில் 1 ½ டன் பீடி இலைகள் இருப்பதும், அது இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பீடி இலைகளை பறிமுதல் செய்த பொலிஸார், குறித்த கடத்தல் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கிலோ பீடி இலையின் இந்திய மதிப்பு ரூ. 500 ஆகும். இலங்கையில் ஒரு கிலோ ரூ. 3 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. அதன் காரணமாக பீடி இலைகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இலங்கையில் இதன் மதிப்பு ரூ. 45 லட்சம் ஆகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#India

Exit mobile version