இலங்கை

வியட்நாமில் உயிரிழந்தவர் சடலம் குடும்பத்தவரிடம் ஒப்படைப்பு!

Published

on

கனடாவுக்கு படகின் மூலம் சட்ட விரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், நவம்பர் மாதம் 08 ஆம் திகதி 303 அகதிகளும் வியட்நாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

இவ்வாறு வியட்நாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இருவர், தங்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டாமென தெரிவித்து நவம்பர் மாதம் 18 ஆம் திகதி தற்கொலைக்கு முயற்சித்தனர்.

இருவரும் வியட்நாமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 37 வயதான சுந்தரலிங்கம் கிரிதரன் உயிரிழந்தார்.

உயிரிழந்த சாவகச்சேரி, கல்வயல் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம், உறவினர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (18) ஒப்படைக்கப்பட்டது.

அவரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் திங்கட்கிழமை (19) இடம் பெற்று சாவகச்சேரி கண்ணாடிப்பெட்டி மயானத்தில் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version