இலங்கை

முட்டை விலை அதிகரிப்பு!

Published

on

நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்ததையடுத்து சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 43 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் நுகர்வோர் அதிகாரசபை நிர்ணயித்திருந்தது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பெப்ரவரி 06 ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (15) தீர்மானித்ததையடுத்து அதுவரை 50 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயிக்கும் திறனை நுகர்வோர் விவகார அதிகாரசபை தற்காலிகமாக இழந்ததையடுத்து, உற்பத்தியாளர்கள் தங்களுக்குத் தேவையான விலையை நிர்ணயித்துள்ளனர்.

சந்தையில் கால்நடை தீவன விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், எதேச்சதிகாரமான விலை அதிகரிப்பு தொடர்பில்,

கால்நடை தீவனத்தின் விலை குறைந்துள்ள போதிலும் கோழிகளை அதிகளவில் கொள்வனவு செய்து பராமரிப்பிற்கு தேவையான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் முட்டையின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க, முட்டை உற்பத்தியாளர்களின் நியாயமற்ற விலை உயர்வுக்கு எதிராக நுகர்வோர் குறுகிய காலத்திற்கு முட்டைகளை கொள்வனவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

இதனிடையே, 10 முதல் 20 ரூபா வரை இருந்த முட்டை விலை, சில மாதங்களில், 50 ரூபாக்கு மேல் விற்பனையாகி வருவதால், மருத்துவ ஆலோசனையின் பேரில், முட்டை சாப்பிட வேண்டியவர்கள் போன்று குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்நாட்டில் அதிகரித்துள்ள ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற, அதிக புரதச்சத்து நிறைந்த உணவான முட்டைகளை குழந்தைகளுக்கு வழங்குவது அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version