இந்தியா

மீனவர்கள் கைது! – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஸ்டாலின்

Published

on

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளது.

இந்தநிலையில், இவ் விடயம் தொடர்பில் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும், அவர்களது ஐந்து விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறித்தும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தடையின்றி தொடர்வதாகவும், இது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினரிடையே அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய, தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள 100க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளை விடுவிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் உதவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

#India

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version