இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்! – 16 மேற்கு மறியல் நீடிப்பு

Published

on

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து, சஹரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்றனர் மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில், காத்தான்குடியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 16 பேரின் விளக்கமறியல் உத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதிவரை நீடித்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல், இன்று (15) உத்தரவிட்டார்.

2019 ஏப்ரல் 19ஆம் திகதி தாக்குதலில் ஈடுபட்ட சஹரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள், சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 66 பேரை கைது செய்யப்பட்டனர்.

காத்தான்குடி பொலிஸார் தாக்கல் செய்ய வழக்கில் இருந்து 3 பேர் விடுவிக்கப்பட்டதுடன், 47 பேருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், 16 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிணை வழங்கப்பட்ட 47 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 16 பேரும் இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்குறிப்பிட்ட உத்தரவைப் பிறப்பித்த நீதவான், அனைவரையும் அடுத்தவருடம் ஜனவரி 31 திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version