இலங்கை

பாலுறவு மருந்து பாவனையால் அதிகரிக்கும் மரணங்கள்!

Published

on

பாலுறவு ஊக்க மருந்து பாவனையினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண பரிசோதகர் இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

பாலுறவு ஊக்க மருந்துகளின் பயன்பாட்டினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம். தரமற்ற மருந்துகளின் பயன்பாடு, தவறான அளவு மற்றும் மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளைப் பயன்படுத்துவதே இந்த இறப்புகளுக்கு முக்கியக் காரணமாகும்.

“20-25 வயதிற்குட்பட்டவர்களும் மற்றும் 40-45 வயதிற்குட்பட்டவர்களும் இவ்வாறு பாதிக்கப்படுகின்றனர். “பல இளைஞர்கள் இந்த பாலுறவு ஊக்க மருந்தினை பரிசோதனைக்காகப் பயன்படுத்துகின்றனர். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று சம்பவங்கள் பதிவாகின்றன. இது உண்மையில் அதிக எண்ணிக்கை, எனவே நாங்கள் இது குறித்து விசேடமாக கவனம் செலுத்த வேண்டும். – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version