இலங்கை

இன்னும் இரண்டு நாட்களே அவகாசம்!

Published

on

அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள சேமநலத் திட்டத்தின் பயன்களை பெற்றுக் கொள்வதற்காக, இதுவரையிலும் 38 இலட்சம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்திற்கு, எதிர்வரும் 28ம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

சமுர்த்தி, முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோய் போன்றவற்றிற்கான கொடுப்பனவு திட்த்தின் கீழ் பயனடையும் அனைத்து குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் மற்றும் உதவித் தொகையை எதிர்பார்த்திருக்கும் பட்டியலில் உள்ளவர்கள் புதிய திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

உரிய விண்ணப்பப் படிவத்தை நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் இருந்து ( www.wbb.gov.lk) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை, விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அங்கீகாரத்துடன் உரிய பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை 011 2151 481 அல்லது 1919 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version