இலங்கை

யாழ். பல்கலை தொழில்நுட்ப பீடத்தின் ஆய்வு மாநாடு

Published

on

புதிய இயல்பு நிலையில் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தல் ( Shaping  the Future in the New Normal) என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சர்வதேச ஆய்வு மாநாட்டுத் (JUICE – 2022) தொடரில், தொழில்நுட்ப பீடத்தினால் நடாத்தப்பட்ட “ TechInn)Technological Advancement and Innovations – தொழில்நுட்ப முன்னேற்றமும், புத்தாக்கமும்” என்ற தலைப்பிலான ஆய்வு மாநாடு நேற்று ( 21 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி, அறிவியல் நகரில் அமைந்துள்ள தொழில்நுட்ப பீட மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தொழில் நுட்ப பீடத்தின் ஆய்வுத் தலைவரும், பீடாதிபதியுமான பேராசிரியர் சிவமதி சிவச்சந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆய்வு மநாட்டில் பல்கலைக்கழக ஆய்வுத் தலைவரும், துணைவேந்தருமான பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, 2022 ஆய்வு மாநாட்டின் வழிப்படுத்துநர் கலாநிதி எஸ். கௌதமன், ஆய்வு வெளியீடுகளின் மநாட்டின் பிரதம ஆசிரியர் பொறியியலாளர் டி.எச்.டீ.ஏ.ஈ. ஜெயசிங்க, மாநாட்டின் இணைச் செயலாளர் கலாநிதி டி.எச்.கே நவரட்ண ஆகியோர் அரங்கை அலங்கரித்தனர்.

இந்த மாநாட்டின் முதன்மை உரையாளராக இலங்கை பசுமைக் கட்டுமானப் பேரவை (Green Building Council of Sri Lanka) யின் தலைவரும், பேராதனைப் பல்கலைக்கழக குடிசார் பொறியியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் ரஞ்சித் திசாநாயக்க கலந்து கொண்டு “பசுமை சார் கண்டுபிடிப்புகளும், தொழில் முனைவுகளும் – Green Innovation and Entrepreneurship” என்ற தலைப்பில் முதன்மை உரையாற்றினர். ஆய்வு மாநாட்டுக்கென முன்வைக்கப்பட்ட 52 ஆய்வுகளில், ஏற்றுக்கொள்ளப்பட்ட 37 ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

இந் நிகழ்வில், பல்கலைக்கழகப் பீடாதிபதிகள், பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

#Srilankanews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version