இலங்கை
சீரற்ற வானிலை! – 11 மாவட்டங்கள் பாதிப்பு
11 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 55,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
13,902 குடும்பங்களைச் சேர்ந்த 55,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை, காலி, திருகோணமலை, கிளிநொச்சி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, புத்தளம், இரத்தினபுரி, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையுடனான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மழையினால் பல ஆறுகள் நிரம்பி வழிவதுடன் களனி கங்கை, களுகங்கை, நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள சில இடங்களில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு - tamilnaadi.com
Pingback: வெள்ள எச்சரிக்கை நீடிப்பு - tamilnaadi.com