இலங்கை
22வது சட்டமூலம் இழுபறியில்!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவின் கடும் எதிர்ப்பு காரணமாக, அதை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம், எம்.பிக்களான எஸ்.பி.திஸாநாயக்க, கலாநிதி சரத் வீரசேகர உள்ளிட்ட பலர் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி எம்.பிகள் கூட்டத்திலும்
நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற விளக்கமளிக்கும் நிகழ்விலும் உத்தேச அரசியலமைப்பு வரைபுக்கு பல எம்.பிக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இவ்விரு கலந்துரையாடல்களிலும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவைத் தவிர வேறு எவரும் அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை என்பதும் விசேட அம்சமாகும்.
அத்துடன், இரண்டரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
முதலில் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட இருந்த நிலையில், எதிர்ப்பு காரணமாக, அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்த வாரம் விவாதம் நடத்தி நிறைவேற்றுவதும் சிக்கலாக மாறியுள்ளதாக அறியமுடிகிறது.
#srilankanews
You must be logged in to post a comment Login