இலங்கை

யாழ் பல்கலையின் திறன்காண் நிகழ்ச்சி 2022

Published

on

முதன் முறையாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் ஏற்பாட்டில் வளர்ந்து வரும் இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் முகமாக “திறன்காண் நிகழ்ச்சி 2022″ (Rising Stars Talent Show – 2022) எனும் கருப்பொருளை மையமாகக் கொண்டு அழகு மற்றும் விருந்தோம்பல் துறைசார்ந்த நிகழ்வானது ஐப்பசி மாதம் 15ம் மற்றும் 16ம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கல்லூரி வளாகத்திலுள் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி பணிப்பாளர் மற்றும் ஏற்பாடக் குழுவினரால் தெரிவித்தனர்.

இன்றைய தினம் பல்கலைக்கழக கல்லூரியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தனர்

நிகழ்வின் பிரதான நோக்கமானது வடமாகாணத்தில் உள்ள இளைஞர்களின் மத்தியில் உள்ள தொழில்நுட்ப திறன்களை இனங்கண்டு, அவர்களின் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்வதாகும். அந்த வகையில் வடமாகாண சுல்வித்துறையின் மேம்பாட்டில் பிரதான பங்குதாரர்களாக விளங்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்லூரியானது கடந்த 07 ஆண்டுகளாக வடமாகாணம் மற்றும் ஏனைய மாகாணங்களை சேர்ந்த மாணவர்கள் பலரிற்கு தொழில்சார் கற்கை நெறிகளை இலவசமாக வழங்கி வருகின்றது.

அத்துடன் இக் கற்கைநெறிகள் சமகால தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதில் பெரும் பங்களிப்பு செய்வதோடு, பல்கலைக்கழக அலுமதி மற்றும் உயர் கல்வியினைத்தொடர இயலாத மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமைகின்றது.

அந்த வகையில் இக் கல்லூரி மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நிகழ்வானது, இளைஞர்களின் நிறமைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியில் பன்முகத்திறன்காண் போட்டிகளான, மணப்பெண் அலங்காரம் மற்றும் உயர் நாகரிசு அலங்காரப் போட்டிகள், பானங்களில் பல வர்ணங்களை வெளிப்படுத்தும் Mocktail போட்டி என்பவற்றை உள்ளடக்கியுள்ளது.

அதற்கு இணையாக உள்ள 50க்கு மேற்பட்ட உயர், நடுத்தர மற்றும் சிறிய வியாபார நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் காட்சியறைகளும், பார்வையாளர்களின் நலன்கருதி அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் குறிப்பாக, கண், காது, உடல் நிறைச்கட்டி, குருதி அமுக்கம் மற்றும் சர்க்கரை பரிசோதனை என்பவற்றினை இலவசமாக செய்து கொள்வதற்கான இலவச மருத்துவ முகாமும் இந்நிகழ்வின் பிரதானமான அங்கங்களாக உள்ளன.

#srilankanews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version