இலங்கை

தாமரை கோபுர பார்வையாளர்கள் நேரத்தில் மாற்றம்!

Published

on

கொழும்பு தாமரை கோபுரத்தை’ பார்வையிட அனுமதிக்கும் நேரம் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்கூட்டி நீடிக்கப்பட்டுள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

அதன்படி, நாளை (20) முதல் வார நாட்களில் நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும், வார இறுதி நாட்களில் காலை 10.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையும் தாமரை கோபுரம் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவான மக்கள் வருகை தருவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

பார்வையிட வருபவர்களுக்கான பயணச்சீட்டு விநியோகம் பார்வை நேரம் முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார். அதன்படி வார நாட்களில் இரவு 9.00 மணிக்கு முன்னரும் வார இறுதி நாட்களில் இரவு 10.00 மணிக்கு முன்னரும் ரிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய வேண்டும். .

சிறப்பு பிரிவு ஏற்படுத்த வாய்ப்பில்லாததால், 2,000 ரூபாய் ரிக்கெட் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு, 500 ரூபாய் ரிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்றார்.

10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான நுழைவுச்சீட்டு 200 ரூபா எனவும், வெளிநாட்டவர்களிடம் இருந்து 20 அமெரிக்க டொலர்கள் பயணச்சீட்டுக்காக அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version