இலங்கை
இலங்கை கிரிக்கெட் அணிக்கு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்து
ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ள இலங்கை கிரிக்கெட் அணிக்கு , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்திலேயே அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஜுலை 8 ஆம் திகதியே டுவிட்டரில் கடைசியாக பதிவிட்டிருந்தார் கோட்டாபய ராஜபக்ச.
ஜுலை 9 மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் நாட்டைவிட்டு தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச, அண்மையில்தான் நாடு திரும்பினார்.
இந்நிலையிலேயே ஜுலை 8 ஆம் திகதிக்கு பிறகு, முதன்முதலில் நேற்று டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார் கோட்டா.
You must be logged in to post a comment Login