இலங்கை

விவசாயிகளுக்கு 40 மில். அமெ. டொலர்

Published

on

இலங்கையில் உள்ள 1 மில்லியன் விவசாயிகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்க மக்களிடமிருந்து இலங்கை விவசாயிகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் (USAID) தலைவர் சமந்தா பவர் தெரிவித்தார்.

இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வந்துள்ள அவர் மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.

இந்தப் புதிய நிதியானது, அடுத்த அறுவடைப் பருவத்தில் விவசாயிகளுக்குத் தேவையான விவசாய தேவைகள் மற்றும் உரங்களை உரிய நேரத்தில் பெறுவதற்கும் அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு வழங்குவதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, ,இலங்கையிலுள்ள 1 மில்லியன் விவசாயிகளுக்கு உரம் தேவைப்படுவதாகவும் அவர்களில் 53,000 பேருக்கு அவசர நிதியுதவி தேவைப்படுவதாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version