இலங்கை

யாழ். மாநகர சபைக்கு தீயணைப்பு வாகனம்

Published

on

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தீயணைப்பு வாகனம் விரைவில் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான வாகனம் ஜப்பானில் இருந்து கொண்டுவரப்பட்டு கொழும்பில் recondition செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்பு பிரிவில் இருந்த தீயணைப்பு வாகனம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நீர்வேலியில் இடம்பெற்ற விபத்தில் முழுமையாக சேதமடைந்தது. இதன்பின்னர் மாநகர சபைக்கான தீயணைப்பு வாகனம் இல்லாதிருந்ததுடன் இது தொடர்பில் 2020 இல் அரசிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. எனினும் அதற்கான கடிதம் இன்றுவரை கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்திற்கு அவசரமாக ஒரு வாகனம் தேவையென்பதை கருத்தில் கொண்டு வர்த்தக சங்கம் கொடையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது நொதேர்ன் சென்றல் வைத்தியசாலையின் (northern central hospital) தலைவர் எஸ்.பி. சாமி ஐயா மற்றும் அவரது மகன் டொக்டர் கேசவராஜா அவர்கள் இருவரும் இதற்கு தாங்களே முழு நிதியையும் ஏற்பதாகவும் இதனை பெற்று மாநகர சபைக்கு வழங்குவதாக உறுதியளித்த நிலையில் இந்த தீயணைப்பு வாகனம் ஜப்பானில் இருந்து கொண்டுவரப்பட்டது.

இதற்கு கொழும்பில் வைத்து இயந்திர பகுதி , நீர் விசிறல் பகுதி, குழாய்கள் என்பன recondition செய்யப்பட்டதுடன். 1300 லீற்றர் நீர் கொள்ளவு உடையதாகும்.

இதேவேளை கொண்டுவரப்பட்ட தீயணைப்பு வாகனம் நீர் விசிறி பரீட்சிப்பு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இம்மாதம் இறுதிக்குள் உத்தியோகபூர்வமாக யாழ்.மாநகர சபைக்கு கையளிக்கப்படவுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version