அரசியல்

2ஆம் வகுப்பு அரசியல் நடத்தும் எதிர்க்கட்சி!

Published

on

நாட்டிலுள்ள எதிர்க்கட்சி 2ஆம் வகுப்பு அரசியல் நடத்தி வருகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

” எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள மந்தபோசனம் தொடர்பான பிரேரணையை நாம் வரவேற்கின்றோம். எனினும் எதிர்க்கட்சி அதனை கொண்டு வந்த நோக்கம் தவறானது. அதனை எதிர்க்கட்சி அரசியல் நோக்கத்தில் பார்க்காமல் அதற்காக என்ன செய்யலாம் என்பது தொடர்பிலேயே யோசனை முன் வைக்க வேண்டும்.

உணவு பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய கணிப்பீட்டில் 113 நாடுகளில் 77 வது இடத்தில் இலங்கை உள்ளது.

கொரோனா வைரஸ் சூழ்நிலை, உக்ரேன் யுத்தம், கடந்த அரசாங்கங்கள் விட்ட தவறுகள் என பலவற்றை இதற்கு காரணமாக கூற முடியும்.

மந்த போசனத்தில் பெரிதும் பாதிக்கப்படும் பிரதேசமாக நுவரெலியா மாவட்டத்தையும் யாழ்ப்பாணம் மாவட்டத்தையும் குறிப்பிட முடியும். அரசாங்கம் அது தொடர்பில் விசேட திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் மந்தபோசனம் தொடர்பில் 50 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அத்துடன் உலக வங்கி 180 மில்லியனையும் ஆசிய அபிவிருத்தி வங்கி 140 மில்லியனையும் அதற்காக வழங்கியுள்ளது. சீன அரசாங்கம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக ஒரு தொகை அரிசியை வழங்கியுள்ளது. அந்த வகையில் மந்த போசனம் தொடர்பில் தற்போதுள்ள நிலையில் இருந்து மீள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறெனினும் மந்தபோசனத்தில் இலங்கை ஆறாவது இடத்திற்கு வந்தமைக்கு கடந்த கால அரசாங்கங்களும் காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version