இலங்கை

யாழ். இந்துவின் அன்னாசி பயிற்செய்கை

Published

on

நகரப்புறங்களில் சாடி முறையிலான அன்னாசி பயிற்செய்கையினை மேற்கொள்ளும் செயற்திட்டம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த அன்னாசி பயிற்செய்கையானது மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அது அறுவடைக்கு தயாரான நிலையில் காணப்படுகிறது.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பாட ஆசிரியர் குமாரசாமி கலைதீபனின் நெறிப்படுத்தலில் பாடசாலையில் குறித்த பாடவிதானத்தினை கற்கும் மாணவர்களின் உதவியோடு குறித்த அன்னாசி செய்கை முறையானது மேற்கொள்ளப்படுகின்றது.

குறித்த செயல் திட்டத்திற்கு யாழ்ப்பாணம் இந்த கல்லூரி அதிபர் ரட்ணம் செந்தில்மாறனும் பூரணமான ஆதரவினை வழங்கி வருகின்றார்.

நகர்ப்புறங்களிலும் பழ உற்பத்தியினை மேற்கொள்ளலாம் என்ற உறுதியோடு இடநெருக்கடியால் சாடிமுறையிலான பயிற்செய்கை திட்டத்தினை மேற்கொள்கிறோம்.

இவ்வாறான செயற்திட்டங்களின் மூலம் எதிர்காலத்தில் உணவு கிடைக்காமை மற்றும் உணவுக்கு ஏற்படும் தட்டுப்பாட்டினை குறைக்க முடியும் என்பதுடன் வேறு வேறு
பயிர்ச் செய்கைகளையும் மேற்கொள்ளலாம்.

தற்பொழுது அன்னாசி போன்ற பழங்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறான பல பயிர்களை நகரப்பகுதிகளில் பயிற்செய்கையினை மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் அதிகளவில் லாபத்தினை இலகுவாக ஈட்டிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

குறிப்பாக பாடசாலையில் இளம் சமுதாயத்தினர் இடையே தற்போதைய பொருளாதார நெருக்கடியில் உற்பத்திகளை செய்வது வரவேற்கத்தக்க ஒன்றே.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version